நீரிழிவு கால் புண் காரணமாக ஏற்படும் அங்கவீனத்தை தடுக்கும் முறைகள் : Dr.S.ராஜேந்திரா

 • கால் மற்றும் பாதங்களைத் தினமும் கழுவிச் சுத்தமாக வைத்திருத்தல்.
 •  தினமும் கால்விரல்களுக்கிடையில் ஈரலிப்பின்றி பேணுதல்.
 • தினமும் கால்விரல்கள், விரல் ஈறுகள் பாதம் மற்றும் கால்களின் கால்புண்
  ஏற்படக்கூடிய காரணிகள் பற்றி அவதானித்தல்.
 • இதற்குக் குடும்ப உறுப்பினர்கள் உதவுதல் அவசியம்.
 • தொழில் செய்யும் இடங்களிலும் வீதியில் நடக்கும் போதும் பாதணிகள் அணிதல்
 • இறுக்கமான மற்றும் மிகவும் தொய்ந்து பழுதான காலணிகளைத் தவிர்த்தல்.
 • கால்விரல் நகங்கள் மட்டமாக வெட்டுதல்.
 • பாதத்தில் ஏற்படும் தோல் தடிப்புக்கள் மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டு நீக்கப்படவேண்டும். இவற்றை நோயாளி வெட்டியகற்ற முற்படக்கூடாது.
 •  பாதம் மற்றும் காலில் ஏற்படும் காயங்களுக்கு (சிறியகாயங்கள் உட்பட) உடனடி மருத்துவ ஆலோசனை பெறுதல். தாமதப்படுத்தலும் நாட்டுவைத்தியம் செய்தலும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
 • நீரிழிவுக்குப் பாவிக்கும் மருந்துகளைத் தவறாது உபயோகித்து இரத்தத்தில் சீனியின் அளவைப் பேணுதல்.
 •  புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்.

Dr.S.ராஜேந்திரா
சத்திரசிகிச்சைநிபுணர்.