சிறுவர்களில் காணப்படும் “ஆஸ்த்மா” – மருத்துவர்.ந.ஸ்ரீசரவணபவானந்தன்

அநேகமான பெற்றோருடைய கவலை ‘ஏன் அடிக்கடி எம் பிள்ளைக்கு இழுப்பு வருகிறது எப்படி இதை வராமல்தடுக்கலாம்? இழுப்பை முற்றாக மாற்ற முடியுமா?” என்பனவாகும்.

உலகில் சிறுவர்களைப் பொறுத்தவரையில் பதினொரு பேரில் ஒருவருக்கு இழுப்பு வருத்தம் காணப்படுவதுடன் நீண்டநாள்களுக்கு மருந்தும் தேவைப்படுகிறது. லண்டனில் சாதாரண வகுப்பு ஒன்றில் மூன்றில் ஒரு சிறுவருக்கு இழுப்பு வருத்தம் காணப்படுகிறது. இலங்கையில் 5 தொடக்கம் 1 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் நூற்றுக்கு 13 தொடக்கம் 25 பேருக்கு இழுப்புக்காணப்படுகிறது (அதாவது நான்கு பேரில் ஒருவருக்கு) கடந்த பத்து வருடங்களில் இழுப்பு வருத்தத்தால் அல்லலுறுவோரின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று வயதுக்குட்பட்டகுழந்தைகளில் மூன்றில் ஒருவருக்கு ஒரு தடவையாவது இழுப்பு ஏற்படுகிறது. அதேபோல் முன்பள்ளிசிறுவர்களில் நான்கில் ஒருவருக்கு இழுப்புக் காணப்படுகிறது. இவற்றிலிருந்து எவ்வளவுக்கு இழுப்பு சிறுவர்களை பாதிக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம் அல்லவா.

நோய்க்காரணிகள்

சிறுவர்களுக்கு இழுப்புஏற்படுவதற்குமிக பொதுவான காரணம் சுவாசக் குழாய் கிருமித் தொற்றுக்களாகும். அதை விட சூழலின் வெப்பநிலைமாற்றம் வெப்பத்திலிருந்து குளிரான காலநிலை சிகரெட் புகைபோன்ற புகையால்காற்றுமாசடைதல், வீட்டினுள்ளே படுக்கை விரிப்புகள் ஜன்னல் திரைச்சிலைகள், மின் விசிறிகளில் தூசி காணப்படல், வளர்ப்பு பிராணிகள் வீட்டினுள்ளே உலாவுதல், பூக்களின் மகரந்த மணிகளின் பரம்பல் போன்றவற்றையும் காரணங்களாக அமைகின்றன.

எந்த வகையான காரணியாக இருப்பினும் சுவாசக்குழாய்களில் ஏற்படும் தாக்கத்தினால் சுவாசக்குழாய் சுருக்கம டைந்து சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். விசேடமாகவெளிச்சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டு விசில் இரைவது போன்ற சத்தத்துடன் இழுப்பு ஏற்படலாம். இதை விட இழுப்பு உள்ளவர்களுக்குவறட்டு இருமல், நெஞ்சறை தசைகள் மேலதிகமாக வேலை செய்து சுவாச வேகம் அதிரித்தல் என்ப வற்றை அவதானிக்கலாம்.

சிகிச்சை முறைமை

இழுப்பு உள்ள சிறுவர்களுக்கு அது இழுப்பு வருத்தம்தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு பெற்றோர் வழங்கும் விரிவானதகவல்களும் உடற்சோதனையும் சிலவகையான குருதி அல்லது எக்ஸ்ரே பரிசோதனைகளும் தேவைப் படலாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இழுப்பு வருத்தம் ஒரு குழந்தைக்கு உள்ளது எனதிடமாகதீர்மானிப் பது சில சமயங்களில் கடினமாயினும் இழுப்புக்கான சிகிச்சைமுறையே அதற்கான அறிகுறி இருப்பின்வழங்கப்படும்.

இழுப்புக்கான சிகிச்சை முறைகளில் பிரதானபங்களிப்பது இழுப்பு ஏற்படாமல் தடுக்கும் முறைகளே. எனவே சிகிச்சை முறையில் பெற்றோருக்கு பெரும் பங்களிப்பு உள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெற்றோர் தமக்குள்ள பங்களிப்பை உதாசீனம் செய்வதுண்டு உதாரணமாக இழுப்புக்கான அறிகுறிகள் உள்ள போது அதனை பதிவேட்டில் பதிந்து கிளினிக்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினாலும் அதை சரிவரச்செய் வதில்லை. அதேபோல் சிறுவர்களுக்கு இழுப்பை உண்டாகும் காரணிகளான சிகரெட் புகை தூசு போன்றவற்றைக் தவிர்ப்பதில் தவறிவிடுகின்றனர். முன்னர் கூறியது போன்று சிறுவர்களுக்கு இழுப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணி சுவாசத்தொற்றுக்களேயாகும் அதனைதவிர்ப்பதற்காகதகுந்த முறையில்கைகழுவுதல், தும்மும்போதும் அல்லது இருமும் போது கைக்குட்டையை அல்லது திசுத்தாளை பாவித்தல் சன நெருக்கடியான பகுதிகளை தவிர்த்தல், சுவாசத் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் பாடசாலைக்கோ வேலைத்தலங்களோ செல்வதை அந்தகாலப்பகுதியில்தவிர்த் தல் என்பன முக்கியமாகும். அதன்மூலம் மற்றோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு சுவாசத் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.

மருந்துப் பாவனை

இழுப்புக்கான மருத்துவ சிகிச்சை முறையில் இழுப்பை குணப்படுத்தும் மருந்துகளும் இழுப்பு அடிக்கடி வராமல் தடுக்கும் நீண்ட நாள்களுக்கு பாவிக்கும் மருந்துகளும் தேவைப்படலாம் இழுப்பு வருத்தத்தை முழுமையாக வராமல் குணப்படுத்துவது என்பது பொதுவாககடினமாகும். எனினும்அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியும். அடிக்கடி இழுப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாவிக்கும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்ப்பதற் காக அவற்றை இன்ஹேலர் எனப்படும் கருவி மூலம் வழங்க வேண்டும். ஆனால் ஒருவருக்கு இன்ஹேலர்மூலம் மருந்தை வழங்க தீர்மாணிக்கையில் பெற்றோர் சம்மதிப்பதில்லை. அதற்கு பெரும்பாலான பெற்றோர் கூறும் பிழையான காரணம் பம்முக்கும் பழகி போடு வோம்” என்பதுவாகும். இது தவறான ஒரு கருத்தாகும். இழுப்பு மருந்தை இலகுவாக பக்க விளைவு குறைவாக பாவிப்பதற்கும் இழுப்பு அடிக்கடிவராமல் தடுக்க நீண்ட நாள்களுக்கு மருந்தை வழங்கசிறந்த முறையும் இன்ஹேலரை பாவிப்பது தான். சில சமயங்களில் இழுப்புமிக அதிகமாக இருந்தால் வைத்தியசாலையில் சேர்த்து மருந்து ஆவி அடிக்கடிபிடிக்கவேண்டும். இப்படியான சந்தர்ப்பங்களிலும் சில பெற்றோர் தவறிழைக்கின்றனர். அதாவது குழந்தையை வைத்தியசாலையில் சேர்க்காது வெளிநோயாளர் பிரிவில் மருந்தாவியை ஒரு சில தடவை பிடித்துவிட்டுவீட்டுக்குகொண்டு சென்று இழுப்பு மிகவும் அதிகமாகி அவசர கிச்சை பிரிவில் தாமதித்தே சேர்க்கின்றனர்.

தீர்வும் உணவு உள்ளீடும்

நீண்டநாள்களுக்குகாணப்படும் இழுப்பு நோய்க்கு சில படிமுறைகளில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் இழுப்பு குறைவாயின் தேவைப்படும் போது சல்பூரமோல்’ எனும் இன் ஹேலரைமட்டும்பாவிக்கலாம். ஆனால் இழுப்பு மிகவும் அடிக்கடி அல்லது தொடர்ந்தும் ஏற்படுமாயின் இழுப்பை வராமல்தடுக்கும் இன்ஹேலருடன் ஒரு சிலவகையான வாயால் உட்கொள்ளும் மருந்துகளையும் வழங்கவேண்டும். இதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

சிறுவர்களுக்கு சுவாசத் தொற்றுக்களாலேயே பெரும்பாலும் இழுப்பு ஏற்படுவதால் சிறுவர்கள்வளரும்போது நோய எதிர்ப்பு சகதி ஏற்பட்டு சுவாசத தொற்றுக்கள் குறைவடைய இழுப்பு நோயும் குறைவடையலாம். எனினும் சிலருக்கு இழுப்பு நோய் வளர்ந்த பின்னரும் தொடருவதைக் காணலாம் முக்கியமான விடயம் ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். ஆறு மாதத்துக் குட்பட்ட குழந்தைக்கு சுவாசத்தொற் ஏற்பட்டு இழுப்பு அறிகுறிகள் ஏற்படுமாயின் அடிக்கடி இழுப்பு பின்னரும் ஏற்பட சந்தர்ப்பம் உண்டு. எனவே குழந்தைகளை சுவாசத்தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமாகும். இருதய நோய் போசணைக் குறைபாடு போன்ற வேறு நோய்கள் இருப்பினும் இழுப்பு அடிக்கடி வரலாம். எனவே அவற்றுக்கும் தகுந்த சிகிச்சை பெறவேண்டும்.

சிறுவர்களுக்கு பெரும்பாலான சந்தர்ப் பங்களில் உணவு ஒவ்வாமையால் இழுப்பு ஏற்படுவதில்லை. வெளிப்படை
யாக உணவு ஒவ்வாமைக்கான அறிகுறிகள் காணப்பட்டாலொழிய சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்கக் கூடாது உதாரணமாக முட்டை பால், பழங்கள் போன்றவற்றால் சளிபிடிக்கும் எனதவறாக எண்ணி குழந்தைகளுக்கு சிலர் வழங்குவதில்லை.

இறுதியாக இழுப்பு என்பது ஓர் அதிகரித்து வரும்நாள்பட்டநோய்என்பதுடன் அது அடிக்கடி வராமலிருக்க தகுந்த சிகிச்சை முறைகளையும் தடுப்புமுறை களையும் மற்றும் வைத்திய ஆலோசனைகளையும் பின்பற்றுதல் மிகவும் இன்றியமையாததுமாகும்.

மருத்துவர்.ந.ஸ்ரீசரவணபவானந்தன்
குழந்தைநல வைத்திய நிபுணர்,