விபத்தில் காயமுற்றவலுக்கான முதலுதவி

விபத்து நடந்தவுடன் அதைச் சூழ்நின்று வேடிக்கை பார்ப்பதையும், அல்லது அதிலிருந்து விலகி ஒடுவதையும் விடுத்து, காயப்பட்டவரை எவ்வளவு விரைவாக வைத்தியசாலைக்கு சிக்கல்கள் ஏற்படாமல் அனுப்பும் மனிதாபிமான செயல்களில் ஈடுபடுவோம்.

இதனால் காயப்பட்டவர் இறப்பதிலிருந்து, மேலும் அங்கவீனமடைவதிலிருந்தும் காப்பாற்ற முடியும். முதலாவதாக விபத்து நடந்த இடத்தில் காயம் பட்டவர் சுவாசத்தை அவதானிக்க வேண்டும். சுவாசம் இருக்கின்றதா அல்லது கஷ்டப்பட்டு சுவாசிக்கின்றாரா என்பதை அவதானிக்க வேண்டும். இதை அவதானித்து அவரது மூக்கு, வாய் பகுதிகளில் மண், கல் போன்றவற்றால் சுவாசப்பாதை அடைபட்டிருந்தால் அவற்றைத் துடைத்து அகற்றுவதன் மூலம் சுவாசப் பாதையை சீர் செய்யலாம்.

உடனடியாக கிட்டிய அப்புலன்ஸ் வசதியை தொலைபேசி மூலம் ஏற்படுத்தலாம். இதனால் நோயாளியைாப் பாதிப்பில்லாமல் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்ல முடியும். வாகன வசதியை செய்துவிட்டு காயப்பட்டவரில் இரத்தப் பெருக்குக் காணப்பட்டால் முடிந்தளவுக்குக் கிடைத்தலை பொருள்களைக் கொண்டு பந்தனம் (Bandage) போட்டு இரத்தப் பெருக்கத்தை நிறுத்தலாம் அல்லது குறைக்கலாம்.

இதனால் அதிக இரத்த இழப்பினால் காணப்பட்டவர் இறப்பதைத் தடுக்க முடியும் தலைக்காயம் கழுத்துக்காயம், முதுகுக் காயம் உள்ளவரை கூடுமானவரை அசையாமல் பாதுகாத்து, முடியுமானால் ஒரு மரப்பலகையில் அவரைப் படுக்கவைத்து பந்தனம் போட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்காலம் இதன் மூலம் அவரது உடம்பின் பாகங்கள் செயல் இழப்பிலிருந்து பாதுகாக்க முடியும். காயப்பட்டவர் சுய நினைவுடன் இருந்து கை, கால்கள் போன்றவற்றில் முறிவுகள் காணப்பட்டால் அவற்றை மட்டைகள் கொண்டு பந்தனம் போட்டு ஆடாமல் அசையாமல் வைத்தியசாலைக்கு அனுப்பலாம்

எந்தச் சந்தர்ப்பத்திலும் விபத்தில் காயப்பட்டவரின் உள்ளுறுப்புகள் அல்லது எலும்புகள் வெளித்தள்ளப்பட்டிருந்தால் அவற்றை உள்ளே தள்ள முனையக்கூடாது. மாறாகச் செய்யின் பாதிப்புகள் அதிகரிப்பதோடு, வேறு காயங்களை ஏற்படுத்துவதாகவும் முடிந்துவிடும். எந்தக் காரணம் கொண்டும் வெளித் தள்ளிய உறுப்புக்களை உள்ளே தள்ளவேண்டாம். நோயாளிக்கு வாயினால் குடிக்கவோ, சாப்பிடவோ வைத்தியர் பார்வையிடும்வரை கொடுப்பதை தவிர்க்கலாம்.

காயப்பட்டவரை எவ்வளவு தூரம் குறைந்த அசைவுகளுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியுமோ அந்தளவுக்கு அவரை பெரிய ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.

எனவே மனிதர்களாகப் பிறந்த நாம் எமக்கு நாமே நல்ல கட்டுப்பாடுகளை வகுத்து முறையில் வாகனம் செலுத்துவதன் மூலம் நம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.

செ.தவச்செல்வம்
தாதிய உத்தியோகத்தர்