பாம்புக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள – Dr.சி.சிவன்சுதன்

  • கால்களிலேயே பாம்புகள் தீண்டுவதால்,பாம்புகள் வசிக்கும் இடங்களில் நடக்கும் போது சப்பாத்து அல்லது கணுக்கால் வரை மூடும் பாதரட்சைகள் அத்துடன் கணுக்கால் வரை நீளமுள்ள ஆடைகள் அணிந்து பாதுகாத்துக் கொள்ளவும்.
  • இரவில் பாம்புகள் மீதுமிதிப்பதைதவிர்க்கவெளிச்சம் ஒன்றைஎடுத்துச் செல்லவும்.
  • பாம்புகள் செறிந்து வாழும் பகுதிகளில் நடக்கும் போதுகையில் ஒருதடியை ஏந்தி அதனால் வழியில் தென்படும் இருமருங்கிலும் புல் பற்றைகளை அடித்துக் கொண்டு செல்வதனால் பாம்புகள் நீங்கள் செல்லும் பாதையில் முன் நோக்கி நகர்ந்து விடும்.
  • நிலத்தில் அழுத்திகனமாக நடந்து நீங்கள் கிட்ட நெருங்குவதையும் பாம்புக்கு எச்சரிக்கவும். ஏனெனில் பாம்புக்குகாற்றில் மிதக்கும் சத்தங்கள் அதிகமாகக் கேட்கமாட்டாது. ஆனால் நிலஅதிர்சியை அவை இலகுவில் உணர்கின்றன.
  • எறும்புப் புற்றுகள்,அடர்ந்த புதர்கள் மரக்குற்றிகளின் கீழ் பக்கங்கள் மரப் பொந்துகள் போன்றவற்றினுள் கவலையினமாககையைவைக்காதீர்கள். எறும்புப் புற்றுகளைஅழிக்கவும். மரப் பொந்துகளைநிரப்பவும். வேலைசெய்யும் போதும் கற்பாறைகள் மரக்குற்றிகள் போன்றவற்றை அகற்றும் போதும் கவனம் செலுத்தவும். ஏனெனில் இவற்றின் கீழ் பாம்புகள் குடியிருக்கும்.
  • நெல் அறுவடைசெய்யும் போதுமிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.
  • பாம்புகள் உணவிற்காகதேடிச் செல்லும் எலி,தவளை, பல்லி போன்றவை வரவிடாது வீட்டையும் சுற்றாடலையும் குப்பை கூளங்களைகிரமமாக அகற்றி சுத்தமாக வைத்திருங்கள்.

சி.சிவன்சுதன்
பொதுவைத்திய நிபுணர்