இது தைரொயிட்தொடர்பான பிரச்சினையா?

 

கேள்வி: எனது வயது 28 ஆகும். எனது கழுத்துப் பகுதியில் சில மாதங்களாக விக்கமொன்று காணப்படுகிறது எனது நிறையானது அதிகரித்துச்செல்வதோடு உடற்சோர்வும் தென்படுகிறது. இது தைரொயிட்தொடர்பான பிரச்சினையாக இருக்குமா???

பதில்: உங்களுக்கு இருக்கும்குனங்குறிகளைப் பார்க்கும்போது தைரொயிட்சுரப்பியின் செயற்படு விகிதம் குறைவாக இருக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றது. தைரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்யும் போது தூக்கம், சோம்பல் உடற்பருமன் அதிகரித்தல் மலச்சிக்கல் குளிரைத்தாங்க முடியாதநிலை, தலை முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இது போலவே பெண்களில் மாதவிடாயின்போது அதிக குருதி வெளியேற்றம் இருக்கும். எனவே நீங்கள் வைத்தியரின் ஆலோசனையை விரைவாகப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். குருதிப் பரிசோதனை மூலம் தைரொயிட் ஹார்மோனின் அளவைப் பரிசோதித்து இதனை அறிந்து கொள்ள முடியும் தைரொயிட் ஹார்மோனின் அளவானது குறைவாக இருக்கும் பட்சத்தில் தைரொக்ஸின் சுரப்பி குறைவாகத் தொழிற்படும் நிலைமையை உறுதி செய்துகொள்ள முடியும். தைரொயிட் சுரப்பியானது வீங்கிக் காணப்படுமானால் ஸ்கான் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று தேவையேற்படின் எவ்என்ஏசி(FNAC) எனப்படுகின்ற இழையப்பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். தைரொயிட் சுரப்பி குறைவாகச் செயற்படும் போது தைரொக்ஸின் மருந்தினைக் காலம் தவறாது கிரமமாக உள்ளெடுக்க வேண்டும். இதன் மூலம் நோயின் குணங்குறியிலிருந்து விரைவாக விடுபட முடியும். தைரொக்ஸின்மாத்திரைகளை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் உள்ளெடுக்க வேண்டும்.இதன் பின்னர் அரை மணித்தியாலத்திற்கு உணவு உள்ளெடுப்பதையோ தேநீர் அருந்துவதையோ தவிர்த்தல் வேண்டும். இந்த நோய் பற்றிய மேலதிக விவரங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும்

மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,