“தேனி இனம் அழிந்தால் மனித இனமும் அழிந்துவிடும்!” Prof.G. Mikunthan

உலகின் மாமேதைகளில் ஒருவரும், மாபெரும் விஞ்ஞானியுமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை இப்படி கூறினார். “உலகில் உள்ள தேனிக்கள் எல்லாம் அழிந்துவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் பூமியில் மனித இனமும் அழிந்து போகும்!”

தேனிக்களின் வாழ்வது மனிதர்களின் வாழ்க்கைக்கு எந்தவகையில் அவசியமானது? மனிதன் ஒன்றும் ஈசலை போல, தேனிக்களை தின்பது இல்லையே. ஈசல் போன்ற பூச்சியினங்கள் உலகின் பிரதான உணவும் இல்லையே என்றும் நமக்கு தோன்றலாம்.

உலகமானது தவிர்க்கவே முடியாத வகையில் பல்வேறு விலங்குகளின், உயிரினங்களின் சங்கிலித் தொடரால் ஆனாது. ஒரு கண்ணியில் இருந்து ஒரு உயிரினத்தை நீக்கினாலும் ஒட்டுமொத்த உயிரின சங்கிலியிலும் அது மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பொருளில் தான் ஐன்ஸ்டீனின் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

தேனிக்கள் அழிந்துவிட்டால், பூக்களின் இனச்சேர்க்கை தடைபடும் அது பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கையை முற்றாக அழித்துவிடும் என்பதால் அது மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

காட்டை பொறுத்தவரை நாம் ஆபத்தானதாக பார்க்கும் சிங்கம், புலி போன்ற விலங்குகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் அவையே இடைநிலையில் இருக்கும் மான் உள்ளிட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. ஒருவேளை சிங்கம், புலி போன்றவை அவற்றின் பற்களுக்காகவும், தோலுக்காகவும் முற்றாக கொல்லப்படுமேயானால் மான் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகி புல்வெளி மற்றும் செடிகள் முற்றாக அவைகளில் உண்ணப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். இந்த சமநிலையை பேணுவது மேலேஇருக்கக்கூடிய விலங்குகள் தான்.

“ஓநாய் குலச்சின்னம்” உலகில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சீன நாவல். மாவோ தலைமையில் நடைபெற்ற புரட்சிக்கு பின்னான காலத்தில், வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு பழங்குடிகளின், மேய்ச்சல் சமூகத்தின் பல்லுயிர் பெருக்க வாழ்வியல் எப்படி சிதைக்கப்பட்டது என்பதையும், வளமாக செழிப்பாக இருந்த நிலங்கள் எப்படி பாலையானது என்பதையும் அழகாக விவரிக்கும் நூல்.

மனித உயிர்களையும், மேய்ச்சல் விலங்குகளையும் இரக்கமற்ற முறையில் கூர்மதியுடன் வேட்டையாடும் ஓநாய்களை அம்மக்கள் தெய்வமாக வழிபடுவதன் காரணம் என்ன? தாங்கள் இறந்தபிறகு தங்களது உடலை ஓநாய்கள் தின்றக் கொடுத்து, ஓநாய் தின்பதாலேயே தங்கள் ஆத்மாக்கள் சொர்க்கம் செல்வதாக மேய்ச்சல் நில மக்கள் கற்பித்துக் கொண்டதன் உளவியல் பின்னணி என்ன?

எல்லாமே பல்லுயிர் பெருக்கம் தான் என்பது ஓநாய் குலச்சின்னத்தின் சாரம்.

வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே மனிதனை முழுமையானவனாகவும், ஒரு நாட்டையும், உலகையும் செழிப்பானதாகவும் மாற்றிவிடாது. கண்மூடித்தனமான தொழிற்துறை வளர்ச்சி சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கமும், அது பல்லுயிர் பெருக்கம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் கணக்கில் கொண்டு வளர்ச்சி திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

நம்மூர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆதர்சனமாக குறிப்பிடும் ஜப்பானின் மசானபு ஃபுகோகா தனது வயலில் உள்ள சிலந்திகளை அழியாமல் காப்பது எந்த வகையில் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்து சீரான ஒரு சமச்சீர் மண்டலத்தை உருவாக்குகிறது என்பதை இயற்கை விவசாயம் தொடர்பான தனது நூலில் விளக்கியிருப்பார். இங்கு எதுவொன்றும் ஒன்றில் இருந்து மற்றொன்று தனித்ததல்ல.

பொருளாதார வளர்ச்சியை மட்டுமே பிரதான நோக்கமாக கொண்டு திட்டங்களை தீவிரமாக செயல்படுத்திவரும் உலக நாடுகளை தனது நெறிகாட்டுதல்களால் வழிப்படுத்த முயலும் ஐ.நா, மே 22ம் தேதியை உலக பல்லுயிர் பெருக்க நாளாக அறிவித்து, அதை கடைபிடித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் பல்லுயிர் பெருக்க நாளின் நோக்கமாக “பல்லுயிர் பெருக்கம் மற்றும் பேண வேண்டிய சுற்றுலா!” என்பதை அறிவித்துள்ளது.

சுற்றுலா என்பது பல்வேறு நாடுகளுக்கும் பெருத்த வருமானத்தை வாரி வழங்கும் ஒரு துறையாக விளங்குகிறது ஒருபுறம் என்றாலும், சுற்றுலா ஒருநாட்டின்

கொண்டுவர வேண்டும்.

இவ்விவகாரத்தில் குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் ஒன்றுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தில் மனிதனுக்கும் இடமுண்டு. மனிதர்களை சூழலில் இருந்தும், சூழல் மண்டலத்தில் இருந்தும் பிரித்து அடையாளம் காண்பதும் பிழையாகிப் போகும். வனங்களில் அதன் ஒரு பகுதியாக, அதன் குழந்தைகளாக பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் பழங்குடி மக்களை வனங்களை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையாக பல்லுயிர் பெருக்க திட்டமும், சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பும் அமையக் கூடாது.

உலகிலேயே அதிக பல்லுயிர் பெருக்கமுள்ள இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலைகள். எழில் மிகுந்த இந்த மலைத்தொடரை அதன் இயல்பு நிலையிலையே பாதுகாப்பதும், வன விலங்குகளை காப்பதும், அதன் பழங்குடிகளை காப்பதும் உலகில் காணப்படும் பல்வேறு வகையிலான உயிரினங்களை காப்பது. மனிதனே உலகின் பிரதானம் என்ற மனித மைய வாதத்தை தகர்த்து உலகில் வாழ எல்லா உயிர்களுக்கும் உரிமை உள்ளது என்ற அடிப்படையை உணர்வது. இதையே உலக பொதுமறையாம் திருக்குறள் சொல்கிறது,

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.”

Prof.G. Mikunthan