தைரொயிட் சுரப்பு குறைவாகவுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்தால்…மருத்துவர் M.அரவிந்தன்

தைரொயிட் சுரப்புக் குறைவாகவுள்ள பெண்னொருவர் தான் கர்ப்பமாகவுள்ளேன் என உறுதி செய்தவுடனேயே (சிறுநீரில் HCG பரிசோதனை மூலம்) வைத்திய ஆலோசனையைப் பெற்று தைரொக்ஸின் மருந்தின் அளவை 25 mic.g இனால் அதிகரித்து உள்ளெடுத்தல் அவசியம். கர்ப்பகாலத்தில் முதல் 12 வாரங்களும் சிசுவின் வளர்ச்சியில் முதன்மையான பங்கை வகிக்கின்றன. இந்தக் காலத்திலேயே குழந்தையின் மூளை மற்றும் உடல் உறுப்புக்களின் வளர்ச்சியானது முதன்மை பெற்றிருக்கும். எனவே இந்தக்காலகட்டத்தில் தேவையான அளவு தைரொக்ஸின் குளிசையை வைத்திய ஆலோசனைப்படி உள்ளெடுத்தல் அவசியம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் தைரொயிட் ஓமோனின் அளவுகளில் பலவிதமானமாற்றங்கள் ஏற்படுகின்றன. குருதியிலுள்ள தைரொயிட்ஓமோனின் அளவைக் குறித்த காலத்துக்கொரு முறை பரிசோதித்துக்குளிசையின் அளவைத்தேவையேற்படின் மாற்றி உள்ளெடுத்தல் வேண்டும். தைரொயிட் மருந்தை சரியான அளவில் உள்ளெடுக்காதவிடத்து பிறக்கப்போகும் குழந்தைக்கும் தாய்க்கும் பலவகையான பிரச்சினைகள் ஏற்படலாம்.

மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்,