வைத்திய நிபுணர்.DR.M.கணேசரத்தினம். இதய அஞ்சலி

மன்னவன் போல்
நீ நடந்தாய்
அன்பை அதிகாரத்தால்
காட்டினாய்
வன் சொல் பேசி எமை
வழி நடத்தினாய்

பொன்னாவோடு நீயிணைந்து
பணி புரிந்தாய் -விழுப்
புண் பட்டோரின்
துயர் துடைத்தாய்
வன் சமர் கொடுமை தனை
வலியுடன் எதிர் கொண்டாய்
கண் தூங்கும் வேளையிலும்
கடும் தவம் புரிந்திட்டாய்
எண்ணிய பொழுதில்
ஏற்றமுடன் பணி முடித்தாய்

பொன் விழா கண்டு
நின் பாதம் பணியும் முன்
விண்ணுலகம் சென்றாயோ எம்
மண்ணுலக வாழ்வு வரை
மறவோம் உன் வாழ்வை
உன் பணி தொடர்வோம்

உன்னை போல் ஒருவனை
இனி காணோம் இவ்வுலகில்
கண்ணீரில் கலைகிறோம்
கண் திறந்து பாராயோ

Nagamany Yoganayagam