தைரொயிட் பிரச்சினையுள்ளவர்கள் தெரிந்திருக்கவேண்டிய நடை முறைகள்.மருத்துவர் M.அரவிந்தன்

தைரொயிட் நோயின் தன்மை, அதற்கான குளிசைமருந்துகளின் அளவு மற்றும் குருதிப் பரிசோதனை (தைரொ யிட்ஓமோன்) செய்யும் காலஇடைவெளி போன்றன கர்ப்பக் காலத்தில் சாதாரண நோயாளரைப்போன்றல்லாது வேறுபடுகின்றன.
*மருத்துவர் பரிந்துரைசெய்து வழங்குகின்ற மருந்தைக் சரியான முறையில் கிரமமாக உள்ளெடுத்தல் வேண்டும்.
*கர்ப்பகாலத்தில் முதல் 12வரங்கள மிக முக்கியமான கால கட்டம் இந்தக் காலப்பகுதியின் போதே பிறக்கப்போகும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி என்பன அதிகம் ஏற்படுகின்றன. எனவே கர்ப்ப காலம் முழுமையும் குறிப்பாக, முதல் 12வரங்களும்தேவையான அளவு மருந்தை வைத்திய ஆலோசனைப்படி உள்ளெடுக்கவேண்டும்.இதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
* சில நோயாளர்களுக்கு கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி (Goitre Nodule) இருந்தால் கர்ப்பம் தரிக்க முன்னரோ அல்லது பின்னரோ வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படலாம்.குறிப்பாக, ஸ்கான் பரிசோ தனை இழையப் பரிசோதனை (FNAC) போன்ற வற்றைக் குறிப்பிடலாம். தைரொயிட் சுரப்பியில் அரிதாகப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புண்டு.
*இறுதியாகக் கர்ப்பிணியொருவர் கர்ப்ப காலத்தின்போது மிகவும் சிரத்தையுடன் தனது தைரொயிட் பிரச்சினையைக் கவனித்துக் கொள்ளுதல் அவசியம். இதனால் கர்ப்பிணிக்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் ஏற்படக்கூடிய தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும், வடமாகாணத்துக்குரிய ஒரேயொரு அகஞ்சுரக்கும் தொகுதி (ஒமோன்) சிகிச்சை நிலையம் யாழ் போதனா மருத்துவமனையில் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.எனவே தேவையேற்படுகின்ற கர்ப்பவதிகள் நிபுணத்துவமான சிறப்பான சிகிச்சையைப் பெற்றுக்கெரள்ளலாம். இதுவே நோயளர்களுக்கு இன்றியமையாததேவை.
மருத்துவர் M.அரவிந்தன் நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி சிறப்பு வைத்திய நிபுணர்