சிறுவனுக்கு அம்மைநோய்க் கிருமிகளை செலுத்தினார்…..

உலகில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொள்ளை கொண்ட நோய் அம்மை நோய் ஆகும். அம்மை நோய்க்கு அக்காலத்தில் எவ்வித மருந்துகளும் கண்டுபிக்கப்படவில்லை. இந்த நோய்க்கு ஆரம்பத்தில் நாட்டு மருந்துகளே பயன்படுத்தப்பட்டன. தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமையினால் இந்நோய் பலரின் உயிரைப் பறித்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அம்மை நோயினால் சுமார் ஆறு கோடிபேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பல மக்கள் இறந்தும் போயுள்ளனர்.

“எட்வேர்ட் ஜென்னர்”

இந்நோயினால் பலர் பாதிக்கப்பட்டதையும், இறந்தமையையும் கண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்த சிகிச்சை நிபுணரான “எட்வேர்ட் ஜென்னர்” இந்நோய்க்கு எப்படியாவது மருந்து கண்டுபிடித்துவிட வேண்டும் என்று துடிப்புடன் செயல்பட்டார். அவர் தனது ஆய்வில் எடடுவயது சிறுவனைப் பயன்படுத்தினார்.

அக்காலகட்டத்தில் மாடுகளை கோமாரி என்கின்ற நோய் தாக்கியது. இந்நோய் மனிதர்களையும் தாக்கியது. கோமாரி தாக்கியவர்களுக்கு அம்மை நோய் தாக்கவில்லை. இதனை அறிந்த “எட்வேர்ட் ஜென்னர்” ஆரோக்கியமான உடலைப் பெற்ற அந்த 8 வயது சிறுவனுக்கு கோமாரி நோய் உண்டாகும் கிருமிகளை செலுத்தினார். கோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு குணமாகக்கூடிய மருந்துகளை விழுங்கி அவனை நோயிலிருந்து விடுபடச் செய்தார். பின்னர் அச்சிறுவனுக்கு அம்மைநோய்க் கிருமிகளை செலுத்தினார். அந்தக் கிருமிகள் அவனை தாக்கவில்லை. இந்த செயல்பாடு அவருக்கு பெரும் வெற்றியை அளித்தது. உடனே அவர் அடுத்த அம்மை நோய் ஆய்வில் ஈடுபட்டார்.

பின்னர் வேறு ஒரு சிறுவனை ஆய்வுக்கு உட்படுத்தி அவன் உடலில் அம்மை நோய்க்கிருமிகளை செலுத்தி சோதனை செய்தார். அவன் அம்மை நோயினால் தாக்கப்பட்டான். தக்க மருந்துகளை வழங்கி அவனை நோயில் இருந்து விடுவித்தார்.

அம்மைநோய்க்கு அம்மைபால் ஊசியை தடுப்பூசியாக எப்படிப் பயன்படுத்துவது என்று கண்டறிந்தார். இவரது செயற்பாட்டை உலக அறிவியல் அறிஞர்களும் மேதைகளும் பரிசீலித்து பாரட்டி ஏற்றுக்கொண்டனர். பிற நாட்டு மன்னர்களும் இவருக்கு பாரட்டி சன்மானமும் வழங்கினார்கள்.

“எட்வேர்ட் ஜென்னர்” அன்று அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த அம்மைப்பால் மூலமாக இன்று உலகில் அம்மை நோய் முற்றாக ஒழிக்கப்பட்டது. இப்படியாகத்தான் அம்மை நோய் அழிந்து போனது