உடல் குண்டாக என்ன செய்ய வேண்டும்?

எனது வயது 30 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனால் உடல் மெலிவடைந்து உள்ளது. உடல் குண்டாக என்ன செய்ய வேண்டும்?
உங்கள் நீரிழிவு நிலை கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சியான விடயம். நீங்கள் திட்டமிட்ட உணவு முறை மூலம் உங்களின் நிறையை அதிகரிக்க முடியும். காலை உணவை நேரகாலத்துடன் ( 7 மணி) உண்ண வேண்டும். பால், தேநீர் போன்றவற்றை உணவு உண்ட பின் அருந்தவும். உணவின் முன் அருந்துவீர்களாயின் அது உங்கள் பசியைக் குறைக்கும். முழு ஆடைப்பால் நாளொன்றுக்கு 2 கப் வரை அருந்த முடியும். உணவுண்ணும் அளவையும், தடவைகளையும் அதிகரித்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு இலகுவில் ஜீரணிக்கக் கூடியதாக உணவுப் பொருட்களைத் தெரிவு செய்து உண்ணவும். சீனி, சர்க்கரை சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். உங்களது உடல்நிறை தொடர்ந்து குறைந்து வருமாயின் அது பற்றி உங்கள் வைத்தியரிடம் தெரிவித்து உடல்நிறை இழப்பு வேறு நோய் நிலைமைகளால் ஏற்பட்டதா என அறிந்து கொள்ளுங்கள்.