உடல் நலத்திற்கு நன்மை தரும் மீன், கருவாடு

  • தரமான புரதத்தினைக் கொண்ட ஓர் நல்ல உணவாகும்.
  • இலகுவாக சமிபாடு அடையக்கூடியது
  • குறைந்தளவு கொழுப்பைக் கொண்டுள்ளது பல வகையான போசாக்குகளைக் கொண்டுள்ளது.
  • வெவ்வேறு வகையான மீன்கள் வெவ்வேறு வகையான போசாக்கு நன்மைகளைக் கொடுக்கும்.
  • மீன்களின் தலைப்பாகமானது ஆரோக்கியமானதும் மூளை வளர்ச்சிக்கு உதவுவதுமான கொழுப்பு வகைகளை கொண்டிருப்பத னால் சமைக்கும் போதும், உண்ணும் போதும் மீனின் எல்லாப் பகுதிகளையும் பயன்படுத்துங்கள்.
  • மீனிலுள்ள கொழுப்புகள் நல்ல கொழுப்புகள். மேலும் இவை ஏனைய வகையில் உடலில் சேரும் தீய கொழுப்புகளைக் குறைக் கும் பணியையும் செய்யும்,
  • மூளை வளர்ச்சியையும் பார்வை விருத்தியையும் தூண்ட எமது உணவில் கிழமைக்கு இரு தடவைகளாவது மீனினைச் சேர்த்தல் வேண்டும்.
  • கூனி இறாலையும், நெத்தலி, கீரி, சூடை போன்ற மீன்களையும் எலும்புகளுடன் உட்கொள்ளும் போது எமக்குத் தேவையான கல்சியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • மீன் ஆனது இலகுவாக உறிஞ்சப்படக்கூடிய இரும்புச் சத்து (Heamiton) அடங்கிய ஓர் நல்ல உணவாகும்