சில உணவுகள் பற்றிய தகவல்கள்

முட்டை:

 • முட்டை ஓர் பூரண உணவாகும்
 • இறைச்சி,பால், மீன் போன்றவற்றில் காணப்படும் புரதத்தினை விட அதிக தரமான புரதம் முட்டையில காணப்படுகிறது.
 • முட்டையானது ஒப்பிட்டளவில் மலிவானதும் இலகுவில் சமைக்கக் கூடியதுமான ஓர் உணவாகும்.
 • ஆரோக்கியமான, உடல் திடகாத்திரத்துடன் வேலை செய்கின்ற வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டையை உட்கொள்ளலாம்.
 • முட்டையானது அவித்தோ, பொரித்தோ, ஓம்லட் செய்தோ பரிமாறப்படல் வேண்டும்.
 • முட்டையைப் பொரிக்கும் போது அதனுடன் காய்கறிகளைச் சேர்த்தால் கொலஸ்ரோல் அகத்துறிஞ்சப்படுவதைக் குறைத்துக் கொள்ளமுடியும்.

இறைச்சி:

 • இறைச்சியானது பெறுமதிமிக்க நல்ல தரமான புரதத்தினைக் கொண்ட உணவாகும்.
 • இறைச்சியிலுள்ள இரும்புச்சத்தினை (Heamiton) எமது உடலானது இலகுவாக அகத்துறிஞ்சிக்கொள்ளும்.
 • ஏனைய உணவுகளிலுள்ள இரும்புச்சத்தினை அகத்துறிஞ்சுவதையும் இறைச்சியிலுள்ள இரும்புச்சத்து கூட்டுகின்றது. (இரும்புச்சத்துள்ள அவரைவித்துக்கள் தானியங்களுடன் சிறிய
  அளவான இறைச்சியைச் சேர்த்துப் பயன்பெறலாம்)
 • இறைச்சியை உண்ணும் போது இயலுமான வரையில் கண்ணுக்குத் தெரிகின்ற கொழுப்புகளை அகற்றவும் மற்றும் கோழி இறைச்சியில் தோலை நீக்கிய பின் சமைத்து உண்ணுங்கள்.

பால் :

(பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைகளுக்குக் கட்டாயம் தாய்ப்பால் மட்டும் கொடுக்கப்படல் வேண்டும்)

 • பால் ஓர் நிறைவான உணவாகும்.
 • எல்லா வயதுப் பிரிவினருக்கும் ஏற்ற ஓர் சிறந்த நிறையுணவாகும்.
 • எலும்புகளின் விருத்திக்கு பால் ஓர் சிறந்த உணவாகும்.
 • பாலில் உள்ள கல்சியமானது உடலினால் நன்றாக அகத்துறிஞ்சப்படக்கூடியதாகும்

எண்ணெய் :

 • சமைப்பதற்கு சிறிதளவான எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
 • ஒட்டாத இரும்பிலான பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் சமைக்கத் தேவைப்படும் எண்ணெயின் அளவைக் குறைக்கலாம்.
 • ஆழமாகப் பொரிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அப்படி ஆழமாகப் பொரிப்பதாயின் தேங்காய் எண்ணெய்களைப் பாவியுங்கள்.
 • தேங்காய் எண்ணெய் தவிர்ந்த ஏனைய எண்ணெய்களை பொரிப்பதற்காக ஒருமுறை பாவித்த பின் மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
 • பொதி செய்யப்பட்டு சாப்பிடத் தயாரான உணவுப்பொருட்களின் பொதியிலுள்ள சுட்டுத்துண்டினைப் பார்த்து நிரம்பிய மற்றும் ரான்ஸ் கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.