நாரிவலி (Backache) – Dr.T. கோபிசங்கர்

அறிந்துகொள்ளுங்கள்

 • முள்ளந்தண்டு கழுத்திலிருந்து நாரி வரை உள்ளது
 • முள்ளந்தண்டு முண்ணான் நரம்பைப் பாதுகாக்கிறது
 • முள்ளந்தண்டு என்புகளுக்கிடையே முள்ளந்தண்டு என்பிடை வட்டத்தட்டுக்கள் உள்ளன.முள்ளந்தண்டு என்பிடைவட்டத்தட்டுக்கள் அதிர்ச்சிகளை உறிஞ்சுகின்றன.
 • தசைகளும் சவ்வுகளும் முள்ளந்தண்டின் சாதாரண அமைவைப்பேணுகின்றன.

நாரிவலிக்கான காரணங்கள்

 • பிழையான நிலையில் உடலைப் பேணுதல். உ-ம் : கூனுதல்.
 • முதுகுத்தசைகள், சவ்வுகளுக்கு ஏற்படும் தாக்கங்கள்
 • முள்ளந்தண்டு என்பிடை வட்டத்தட்டுகளில் ஏற்படும் சேதங்கள்/விலகல்கள்.
 • முள்ளந்தண்டு என்பிடை வட்டத்தட்டு நரம்புகளை அழுத்தினால் காலில் விறைப்பு /வலி ஏற்படும்.

உங்கள் முள்ளந்தண்டைப் பாதுகாத்தல்

 • பாரங்களைத் தூக்கும் முறை
 • ஒரு பாதத்தை மற்றைய பாதத்திற்கு முன் வையுங்கள்.
 • முதுகை நேராக வைத்திருங்கள்.
 • இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டை மடித்து இருங்கள்.
 • பாரத்தை உங்கள் உடலோடு அணைத்துத் தூக்குங்கள்.
 • இடுப்பு மூட்டு,முழங்கால் மூட்டை நிமிர்த்தி, நீட்டிப் பாரத்துடன் எழும்புங்கள்
 • நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.
 • தட்டையான உறுதியான மேற்பரப்புகளில் உறங்குங்கள்.
 • படுக்கையிலிருந்து எழும்பும் போது முழங்கால்களை மடித்து இருகால்களையும் கட்டிலுக்கு வெளியே கொண்டு வந்து முழங்கைகளினால் ஊன்றி முள்ளந்தண்டை நேராக வைத்தபடி எழும்புங்கள்.
 • இருக்கும் போது தொடைகளுக்கும் நாரிக்கும் போதிய ஆதாரத்துடன் இருங்கள்.
 • நாரி வலி ஏற்படும் போது ஓய்வு எடுங்கள்.
 • கூனாதீர்கள். நீங்கள் வேலை செய்யும் போது மேசை நுனி உங்கள் இருப்புமட்டத்தில் இருக்கச் செய்யுங்கள்.
 • உடல் நிறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
 • ஒரே நிலையில் 30நிமிடங்களிற்கு மேல் நிற்காதீர்கள், இருக்காதீர்கள்.

Dr.T. கோபிசங்கர்
என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.