குழந்தைகளின் மேலதிக உணவுகளினது போசாக்குத் தரத்தை அதிகரிக்கும் முறைகள்

 • ஒவ்வொரு வேளை உணவுகளினதும் பல வகையான உணவுகளை வழங்குவதற்கு உறுதி செய்தல்
 • ஆரம்பத்தில் விலங்கு உற்பத்தி உணவுகளையும் பருப்புகளையும் அறிமுகப்படுத்துங்கள்.
 • மீன், நெத்தலி, கோழி, வாத்து போன்றவற்றின் இறைச்சி, ஈரல் மற்றும் முட்டை இவை இரும்பினை அதிகமாகக் கொண்ட மூலங்கள் ஆகும்
 • மாறாக நாளாந்த உணவுகளில் பயறு, கௌபி, கடலை, சோயா, பசளி, சாரனை, வல்லாரை போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
 • முளைத்த பருப்புகளைச் சேர்த்தல் விரும்பத்தக்கதாகும்.
 • ஈரல், முட்டை மஞ்சள் கரு,பூசணி, மஞ்சள் வற்றாளை, கரட், பப்பாசி, மாம்பழம் மற்றும் கடும் பச்சையான இலைகள் போன்றவற்றில் ஒன்றை அல்லது பலவற்றை சேருங்கள் இவை விற்ற
  மின் ஏயை அதிகமாகக் கொண்ட மூலகங்களாகும்.
 •  தினமும் உள்ளுரில் கிடைக்கின்ற பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • பழங்கள் மசிக்கப்பட்ட நிலையில் அல்லது பழங்களின் சதைப் பாகமாக கொடுக்கப்பட வேண்டும்.பழச்சாறுகளாக அல்ல.
 • உணவுகளைச் சமைக்கும் போது தேங்காய்ப் பாலை அல்லது 1-2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யைச் சேருங்கள். அல்லது சமைத்த உணவுகளுக்கு 1-2 தேக்கரண்டி கொழுப்பு பரப்பிகளை அல்லது பட்டரை சேருங்கள்- இவை உணவுகளில் மென்மையையும் விரும்பக் கூடிய சுவையையும் அதிக சக்தியையும் உருவாக்கும்.
 • யோகட், தயிர் போன்ற பாற்பொருட்களும் தானியங்களை அடிப்படையாகக் கொண்டு வீட்டில் தயாரிக்கின்ற சிற்றுண்டிகளையும் கொடுக்கப்படலாம் இவற்றுக்கு சீனியோ அல்லது தேனோ
  சேர்க்கப்படாமல் கொடுக்கப்பட வேண்டும்.

உப்பையும் சீனியையும் தவிர்ப்பதற்கான காரணங்கள்

 • குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாகும் போது உப்புக்கும் சீனிக்கும் அடங்காத ஆசையை வளர்த்துக் கொள்வார்கள்
 •  மேலதிக உப்பை வெளியகற்றுவதில் கஷ்டம் ஏற்படும்.
 • அதிக சீனியைக் கொண்டுள்ள உணவுகளை உண்பதால் போசாக்கான உணவுகளை உட்கொள்ளுதலை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
 • அதிக சீனியை கொண்டுள்ள உணவுகள் பற்களின் சிதைவுக்கு காரணமாகின்றது.
 •  அதிக சீனியை உட்கொள்ளுதல் அதீத நிறைக்கு ஏதுவாகின்றது.