அறிமுகம்

தமிழ் பேசும் மக்களின் உண்மையான ஆரோக்கிய மேம்பாட்டை இலக்காகக் கொண்டு இந்த இணையதளம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு மனிதனின் பூரணமான ஆரோக்கியம் என்பது அவனின் உடல், உள, சமூக, ஆன்மீக நன்னிலையில் தங்கி நிற்கிறது என்பதை பல்வேறுபட்ட உலக சுகாதார அமைப்புகளும் ஏற்று செயற்பட்டு வருகின்றன.

உண்மையான ஆரோக்கியம் பலருக்கு எட்டாத கனியாக கனவாக இருந்துவரும் நிலையில் அந்தக் கனவை நனவாக்கும் நீண்ட பயணத்தில் ஊன்றுகோலாக இந்த தளம் இருக்கும் என நம்புகிறோம்.

 

Selvarathinam Sivapalan

பலருக்கும் வழிகாட்டியாய்த் திகழ்ந்த கல்விமானும் முன்னைநாள் கொத்தணி அதிபருமாகிய அமரா். செல்வரத்தினம் சிவபாலன் அவா்களுக்கு இந்தத்தளம் காணிக்கையாகட்டும்.